April 30, 2011
 

Wi-Fi கதிர்கள்

Wi – Fi கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

அப்போது (Wi – Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது எனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மொபைல் போன்களின் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை எனவும் தெரிவித்துள்ளனர்.