Download Tamil Font ICC World Cup 2011 Final IND vs SL Video Clips April 4,2011 அசல் உலகக் கோப்பை கஸ்டம்ஸ் பிடியில்-இந்திய வீரர்கள் கையில் நகல்!!

மும்பை:
ஐசிசி உலகக் கோப்பை இன்னும் சுங்கத்துறையிடம்தான்
உள்ளது என்றும், இந்திய வீரர்களிடம்
கொடுக்கப்பட்டது நகல் கோப்பை என்றும்
இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருளை
இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும், அதன்
உண்மையான மதிப்பில் 35 சதவீத தொகையை
சுங்க வரியாக கட்ட வேண்டும். ஆனால் ஐசிசி
உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு
கொண்டு வந்தபோது வரி கட்டப்படவில்லை.
இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து
மும்பை சுங்கத்துறையினர் கோப்பையைக்
கைப்பற்றி விட்டனர். ஆனால் உலகக் கோப்பை
தங்களிடம்தான் இருப்பதாக முன்பு ஐசிசி
தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்திய
வீரர்களிடம் இருப்பது நகல் கோப்பை என்றும்,
ஒரிஜினல் கோப்பை இன்னும் சுங்கத்துறை
வசம்தான் இருப்பதாக இந்திய கிரிக்கெட்
வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அது மேலும் விரிவாக தெரிவிக்கவில்லை.
சுங்கத்துறையிடம் கேட்டதற்கு, வரி கட்டாததால்
உலக்க கோப்பை தங்கள் வசமே இருப்பதாகவும்,
வரியைக் கட்டினால் மட்டுமே கோப்பையைத் திருப்பித்
தருவோம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.