April 30, 2011
 

மின் கட்டணம் செலுத்துவோர் கவனத்துக்கு...

சிதம்பரம், ஏப். 29: சிதம்பரம் கோட்டத்தில் மின் நுகர்வோர்கள் நலன் கருதி மின் கட்டணம் செலுத்துவதற்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மின் வாரிய செயற்பொறியாளர் ரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:
இணையதளம் மூலம் தங்களுடைய வீடுகளில் இருந்தபடியே இணையதளம் வசதி உள்ள இடங்களிலிருந்தும் மின் கட்டணத்தை ர்ய்ப்ண்ய்ங் ல்ஹஹ்ம்ங்ய்ற் மூலம் செலுத்தலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்க்ஷ.ண்ய் என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டணத்தை சம்மந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்திலும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் அமைந்துள்ள அனைத்து மின் வாரிய கட்டண வசூல் மையங்களிலும் செலுத்தலாம். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின்படி கணினிமயமாக்கப்பட்ட தபால் நிலையங்களிலும் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம்.

சிதம்பரம் கோட்டத்துக்கு உள்பட்ட அண்ணாமலை நகர், ஒரத்தூர், பி.முட்லூர், புவனகிரி, சிதம்பரம் (கிழக்கு), சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, பின்னலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், டி.நெடுஞ்சேரி, வல்லம்படுகை, அண்ணாமலைநகர் மற்றும் கம்மாபுரம் ஆகிய தபால் நிலையங்களில் இந்த வசதி உள்ளது. இதற்கான சேவைக் கட்டணம் ரூ.5 மட்டும் செலுத்த வேண்டும்.

மேற்கண்ட 3 முறைகளிலும் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு புதியதாக மின் வாரியத்தால் வழங்கப்படும் 10 இலக்க எண் (மின் இணைப்பு எண்) கொண்ட வெள்ளை அட்டை அவசியமாகும்.

மேற்படி வெள்ளை அட்டையை தங்களின் இடத்துக்கு மின் கணக்கீடு செய்யவரும் மின் கணக்கீட்டாளரிடம் இலவசமாக கேட்டு பெற்று கொள்ள வேண்டும். மேலும் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 30 நாள் மின் கணக்கீடு மற்றும் 30 நாள் மின் கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தின்படி மின் கணக்கீடு செய்யும் தேதியிலிருந்து 20 நாளுக்குள் நுகர்வோர்கள் தங்கள் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என ரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.