இஸ்லாம்ய கல்வி

Article Of Porto Novo

Help Line

PNO Maricarn Tamil

Best Antivirus

PNO Marine Biology

Comments


parangipettai.pno@gmail.com
April 26, 2011
சிதம்பரத்தில் செயற்கை குற்றால அருவி

சிதம்பரம், ஏப். 25: கோடை காலத்தில் குழந்தைகள் கொண்டாடி மகிழ
சிதம்பரத்தில் செயற்கை குற்றால அருவி, கொலம்பஸ் ராட்டினம்
ஆகியவற்றை தனியார் நிறுவனம் அமைத்துள்ளது

சிதம்பரம் மேல வீதியில் உள்ளது கஸ்தூரிபாய் கம்பெனி. இந் நிறுவனம்
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாத கலாட்டா என்ற தலைப்பில் புதுமையாக
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் வகையில் பல்வேறு
போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு கோடையை குதுகாலத்துடன் கொண்டாடி மகிழ குற்றால
அருவியும், கொலம்பஸ் ராட்டினத்தையும் அமைத்துள்ளது. இந்த குற்றால
அருவியில் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் குளிக்க அனுமதியளிக்கப்பட ுகிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி
பரிசுகளையும் வழங்குகிறது.

கோடையில் குளுமையாக இருக்க வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் கிரீம்,
தர்ப்பூசணி ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்குகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.