இஸ்லாம்ய கல்வி

Article Of Porto Novo

Help Line

PNO Maricarn Tamil

Best Antivirus

PNO Marine Biology

Comments

parangipettai.pno@gmail.com
April 14, 2011
ஸ்பெக்ட்ரம் ராஜா குவித்த ரூ.1,500 கோடி சொத்து
பறிமுதல் செய்ய அதிதீவிரம்

புதுடில்லி :
2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் மூலம் சட்டத்திற்கு
புறம்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும்
அவரது நெருங்கிய கூட்டாளிகள் வாங்கிக் குவித்த
1,500 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்
துறையினர் பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ராஜா
பதவி வகித்த காலத்தில் நடந்த "2ஜி' ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பீடு ரூ.1.76 லட்சம் கோடி
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில்
சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முன்னாள் மத்திய
அமைச்சர் ராஜா உட்பட, பலர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மோசடி, பினாமியாக பல்வேறு வழிகளிலும்

கோடிக்கணக்கான பணம் புழங்கிய விதம் ஆகியவை சி.பி.ஐ.,
விசாரணையில் உள்ள முக்கிய அம்சமாகும். மேலும், ரியல் எஸ்டேட்
துறையிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, சி.பி.ஐ., மற்றும்
அமலாக்கப்பிரிவினர் நடத்திய சோதனையில் தெரியவந்தது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அவரது
கூட்டாளிகள், நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவினர்
நடத்திய அதிரடி சோதனையில், இது தொடர்பாக வாங்கிக் குவிக்கப்பட்ட அசையும்
சொத்துக்கள், அசையா சொத்துக்களுக்கான விவரங்களை சேகரித்துள்ளனர்.மத்திய
அமைச்சர் ராஜாவுக்கு, சென்னை மற்றும் டில்லியில் பெரம்பலூர் மற்றும் பல
பகுதிகளில் உள்ள சொத்துக்கள் விவரங்களை பட்டியலிடும் பணியை அமலாக்கப்பிரிவு
துவக்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக ராஜா மற்றும் அவர் குடும்பத்தார் வசமுள்ள 1,500
கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்க
உள்ளனர்.இவ்வாறு வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துக்கள் ராஜாவின் மனைவி மற்றும்
அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரில் உள்ளன. ராஜாவின் குடும்ப
டாக்டரும் அமலாக்கத் துறையின் பிடிக்குள் சிக்கியுள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த உடன் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை
துவக்குவது அமலாக்கப்பிரிவு விசாரணையின் தொடர் நடவடிக்கை தான். மேலும், வரும் 25ம்
தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன் இந்த நடவடிக்கை இருக்கலாம்.
சட்டவிரோதமாக பணத்தை பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்களை சேகரித்திருக்கின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக முன்னணி நிறுவனங்களின் பிரமுகர்கள் உட்பட 57 பேர் மீது புகார்
சேகரிக்கப்பட்டிருப்பதால், இது குறித்து அமலாக்க பிரிவினர் வெளிப்படையாக தற்போது தகவல்
தர முன்வரவில்லை.மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும்
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே தரகராக செயல்பட்ட நிரா ராடியா மீது
சட்டவிரோத பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறையின்
தயாராகி வருகின்றனர்.

சிறையில் சாப்பாடு தரமில்லை: ராஜா புகார்
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் அவரது தனி
உதவியாளர் ஆர்.கே.சந்தாலியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்தா
பெகுரா ஆகியோர் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறையில்
தனக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக, சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியிடம் ராஜா
புகார் தெரிவித்துள்ளார். இவரது புகாருக்கு ஆதரவாக, அவரது முன்னாள் தனி உதவியாளர்
சந்தாலியா மற்றும் சித்தார்த்தா பெகுராவும் நீதிபதியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.