May 9, 2011
 

அயோத்தி தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி - ராம்ஜென்ம பூமி நிலப் பிரச்சனையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் ராம்ஜென்ம பூமி நிலத்தின் உரிமை தொடர்பாக 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் நீதிமன்றதின் அமர்வு நீதிமன்றம் நிலத்தை மூன்று பங்காகப் பிரித்து உத்தரவிட்டது.
br> இதனை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஆச்சர்யம் அளிப்பதாகக் கூறியுள்ளனர். நில உரிமை தொடர்பாக வழக்கு தொடர்ந்த எவருமே தங்களுக்குப் பகுதி நிலம் வேண்டும் என்று கோரி வழக்கு தொடராத நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆச்சர்யம் அளிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கை நாங்கள் ஆய்வு செய்வோம். ஆய்வு முடிந்து மறு தீர்ப்பு வரும் வரை பிரச்சனைக்குரிய இடம் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.