May 3, 2011
 

இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி

இந்தியாவில் அரசியல் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள 30 முதல்வர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கணக்குக் காட்டப்பட்ட வரை, அதில் நமது தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாமவராக ரூ. 44 கோடி சொத்து மதிப்பில் உள்ளார். முதலிடத்தில் உ.பி முதல்வர் மாயாவதி உள்ளார்.

பட்டியல் விபரம்:

1.மாயாவதி (55) - உத்தரபிரதேசம் - ரூ. 87 கோடி

2.மு.கருணாநிதி (86) - தமிழ்நாடு - ரூ. 44 கோடி

3. டோர்ஜி காண்ட் (56) - அருணாச்சல பிரதேசம் - ரூ. 23 கோடி (இவரை சில நாள்களாகக் காணவில்லை)

4. பிரகாஷ் சிங் பாதல் (83) - பஞ்சாப் - ரூ. 9.20 கோடி

5. கிரண்குமார் ரெட்டி (50) - ஆந்திரா - ரூ. 8.11 கோடி

6. நவீன் பட்நாயக் (64) - ஒரிசா - ரூ. 7.89 கோடி

7. நெய்பியூ ரியோ (60) - நாகலாந்து - ரூ. 7.23 கோடி

8. பிரிதிவிராஜ் சவான் (65) - மராட்டியம் - ரூ. 6.81 கோடி

9. வி.வைத்திலிங்கம் (60) - புதுச்சேரி - ரூ. 5.70 கோடி

10. தருண் ஹோகயி (75) - அசாம் - ரூ. 4.94 கோடி

11. பவான் சாம்ளிங் (60) - சிக்கிம் - ரூ. 3.82 கோடி

12. பூபிந்தர் சிங் ஹூடா (63) - அரியானா - ரூ. 3.74 கோடி

13. உமர் அப்துல்லா (41) - ஜம்மு காஷ்மீர் - ரூ. 3.49 கோடி

14. முகுல் சங்மா (46) - மேகாலயா - ரூ. 3.42 கோடி

15. திகாம்பர் காமத் (57) - கோவா - ரூ. 3.23 கோடி

16. லலித்வாலா (69) - மிசோரம் - ரூ. 2.29 கோடி

17. எடியூரப்பா (68) - கர்நாடகா - ரூ. 2 கோடி

18. நிதிஷ் குமார் (60) - பீகார் - ரூ. 1.5 கோடி

19. அர்ஜுன் முண்டா (43) - ஜார்கண்ட் - ரூ. 1.33 கோடி

20. சிவராஜ் சவுகான் (52) - மத்திய பிரதேசம் - ரூ. 1.23 கோடி

21. ஷீலா தீட்சித் (73) - டெல்லி - ரூ. 1.18 கோடி

22. பி.கே.துமால் (67) - இமாச்சல பிரதேசம் - ரூ. 1.18 கோடி

23. அசோக் ஹெலாட் (60) - ராஜஸ்தான் - ரூ. 1.04 கோடி

24. ராமன் சிங் (58) - சத்தீஸ்கர் - ரூ. 1 கோடி

25. புத்ததேவ் பட்டாச்சார்யா (67) - மேற்கு வங்காளம் - ரூ. 46.20 லட்சம்

26. நரேந்திர மோடி (60) - குஜராத் - ரூ. 42.56 லட்சம்

27. ரமேஷ் போக்ரியால் (52) - உத்தரகாண்டம் - ரூ. 37.30 லட்சம்

28. அச்சுதானந்தன் (87) - கேரளா - ரூ. 16.09 லட்சம்

29. மாணிக் சர்கார் (62) - திரிபுரா - ரூ. 8.11 லட்சம்

30. ஒக்ரம் இபாபி சிங் (63) - மணிப்பூர் - ரூ. 6.09 லட்சம்