May 2, 2011
 

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்! : உறுதிபடுத்தினார் ஒபாமா

வாஷிங்டன்: சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த அல் காய்தா தலைவரும், சர்வதேச தீவிரவாதியுமான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். 2001‌ம் ஆ‌ண்டு செ‌ப்ட‌ம்ப‌ர் 11 ‌ம் தே‌தி அமெ‌‌ரி‌க்கா‌வி‌ல் இர‌ட்டை கோபுர‌ம் தா‌க்குத‌லி‌‌ல் தொட‌ர்புடைய ஒசாமா ‌பி‌‌ன்லேட‌ன் 10 ஆ‌ண்டுகளாக அமெ‌ரி‌க்கா‌வி‌ல் தேட‌ப்ப‌ட்டு வ‌ந்தவ‌ர். ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.