May 10, 2011
 

மன்னார் வளைகுடா தீவுகள் கடலில் மூழ்கின: புவி வெப்பமடைதல் காரணம்!

புவி வெப்பமடைதல் காரணமாக, மன்னார் வளைகுடா பகுதியில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கியது, பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

மன்னார் வளைகுடாவில் சிறியதும், பெரியதுமாக 21 தீவுகல் உள்ளன. இவைகள் நான்கு பிரிவுகளாக, இவைகளின் இருப்பிடத்தை வைத்து, குறிப்பிடப்பட்டு வருகின்றன. அவை தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, மண்டபம் என அடையாளமிடப்பட்டு அழைக்கப்படுகின்றன.

புவி வெப்பமடைதல் காரணமாக, துருவப்பிரதேசங்களில் உள்ள பெரும் பெரும் பனிப்பாறகள் உருகி, கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கடல் நீர்மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 1.8 மி.மீ. உயர்ந்துகொண்டு வருகிறது.

கடல் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக, மண்டபம் பிரிவில் பூமரிச்சான் தீவும், தூத்துக்குடி பிரிவில் விலங்கு சல்லி தீவும் கடலில் மூழ்கியுள்ளன. புவி வெப்பமடைதல் காரணமாக,இந்த இரண்டு தீவுகளும் கடலில் மூழ்கி விட்டன என மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா வார்டன் சுந்தரகுமார் கூறியுள்ளார்.

பவள பாறைகள் தீவுகளுக்கு தடுப்பு அமைப்பாக செயல்பட்டு வந்தன. சட்ட விரோதமாக பவளப்பாறைகளை வெட்டியெடுத்ததால்தான் தீவுகள் மூழ்கி விட்டன என்று, ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேம்பாட்டு திட்ட பிரதிநிதி தீபக் சாமுவேல் கூறியுள்ளார்.